Home » சினிமா » நல்ல கேரக்டர் என்றால் குணசித்ர வேடத்திலும் நடிக்க தயார்: கதிர்

நல்ல கேரக்டர் என்றால் குணசித்ர வேடத்திலும் நடிக்க தயார்: கதிர்

மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.  தனது திரையுலக அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-

பரியேறும் பெருமாள் படம் தானாக வந்த வாய்ப்பு அல்ல. நானாக தேடிப்போய் பெற்றது. எனக்கு இப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. இனி எத்தனை படங்கள் நடித்தாலும் என்னுடைய சிறந்த படம் என்றால் இதைத்தான் கூறுவேன். ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்.

அடுத்து வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும். அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும்.
தற்போது குமரன் என்பவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறேன். விக்ரம் வேதாவுல கிடைச்ச மாதிரி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன் குணசித்திர வேடத்திலும் நடிக்கவும் கூட தயங்கமாட்டேன் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*