Home » Flash News » நவ. முதல் வாரத்தில் 2.0 டிரெய்லர் ரிலீஸ்

நவ. முதல் வாரத்தில் 2.0 டிரெய்லர் ரிலீஸ்

சென்னை, அக். 6:  2.0 படத்தின் டிரெய்லர் நவம்பர் முதல்வாரத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஐதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடந்துவருவதாகவும் கூறியுள்ளனர்.  ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகி இருக்கும் திரைப்படம் 2.0. எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக வெளிவரும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் என்று நட்சத்திர பட்டாளமே களமிறங்கி நடித்துள்ளனர்.

போன வருடம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0 பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், கிராஃபிக் காட்சிகளை தயார் செய்துவந்த நிறுவனம் இழுத்தடித்தன் விளைவாக தான் பட ரிலீஸ் தள்ளிபோனதாக விளக்கமளிக்கப்பட்டது. இதனிடையே, செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவான படம், அதுவும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் படம் என்றால் சும்மாவா? என்று கேட்டும் அளவுக்கு படத்தின் டீசர் பிரம்மிக்க வைத்து, அனைவராலும் பேசப்பட்டது.

இந்த நிலையில், 2.0 படத்தின் டிரெய்லர் நவம்பர் முதல்வாரத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஐதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ’பேட்ட’ படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்துவருகிறது. இந்த நிலையில், ரஜினி சாலையில் நடந்துவருவது போன்ற சில நிமிட படப்பிடிப்பு காட்சிகள் லீக் ஆகிவிட்டன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*