Home » சினிமா » பரியேறும் பெருமாள் போன்ற படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்: பா.ரஞ்சித்

பரியேறும் பெருமாள் போன்ற படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்: பா.ரஞ்சித்

ரசிகர்களின் ஆதரவோடு 2-வது வாரத்தை தொட்ட ‘பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரஞ்சித் பேசும்போது, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும் என்றார்.

இயக்குனர் ராம் பேசுகையில், இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. இயக்குநர் மாரி செல்வராஜ் என் மகன் போன்றவன். அவன் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*