Home » சினிமா » ஜனவரியில் பேட்ட ரிலீஸ்?

ஜனவரியில் பேட்ட ரிலீஸ்?

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. இதில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகன், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாஸ்சுதீன், சசிகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் முதல்முறையாக
ரஜினிபடத்திற்கு இசையமைக்கிறார்.

இதன் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், அடுத்து டேராடூன், அதன்பிறகு லக்னோ, இப்போது வாரணாசி என ஷýட்டிங் பிஸியாக நடக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இரவு 2-வது லுக் வெளியிடப்பட்டது. இதில் இளமையான தோற்றத்தில் வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் பெரிய மீசையுடன் நெற்றியில் விபூதி பட்டை, குங்குமம் என செம லுக்கில் சூப்பர் ஸ்டார் காட்சி தருகிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வேகமாக பரவி இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்குகிறது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கோ அல்லது குடியரசு தினத்திற்கோ படத்தை வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை நவம்பர் இறுதியில் வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இறுதிகட்டப்பணிகள் நடந்து வருவதால் படத்தை ரிலீஸ் செய்ய எந்த பிரச்சனையும் இருக்காது என தெரிகிறது. மேலும் டிசம்பர் முதல் கமல் நடிப்பில் இந்தியன்-2 படத்தை ஷங்கர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் ஜனவரி முதல் நடிக்க உள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*