Home » சென்னை » சந்திரனில் சாய்பாபா முகம்

சந்திரனில் சாய்பாபா முகம்

சென்னை, செப்.24: நிலவில் சாய்பாபாவின் முகம் நேற்று இரவு தோன்றியது. இந்த அதிசய நிகழ்வை தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கலியுக கடவுளான சாய்பாபா அவ்வப்போது பல அதிசங்களை நிகழ்த்தி வருவார். சமீபத்தில் பாபா கண்ணில் இருந்து தண்ணீர் வருவது போலவும், நெற்றியில் இருந்து விபூதி வருவது போலவும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், இன்று பௌர்ணமி என்பதால் நேற்றைய தினம் சந்திரன் மிகவும் பிரகாசமாக தெரிந்தது. இரவு 8 மணி அளவில் நிலவில் சாய்பாபாவின் உருவம் தோன்றியது. அதை பார்த்த பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து ஏராளமானோர் நிலவை பார்த்த வண்ணம் இருந்தனர். இந்த அதிசயத்தை பலருக்கு தெரியப்படுத்தினர்.

இது குறித்து வண்டலூர் ஷீரடி சாய்பாபா தியான மையத்தை சேர்ந்த சாய்ராம் கூறுகையில், பாபா தான் மறைந்த பிறகும் தன்னுடைய கோட்பாடுகள் இந்த உலகில் இருக்கும் என்று சொல்லியிருந்தார். தன்னை நேசிக்கும் பக்தர்களுக்காக 11 கோட்பாடுகளையும் வகுத்து சென்றுள்ளார். இது போல் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளது. அப்போது எல்லாம் இவ்வளவு பிரபலமாக பேசப்படவில்லை.

தன்னை நம்பிய பக்தர்களுக்கு எப்போதும் காட்சி தரும் சாய்பாபா நேற்று உலக மக்களுக்கு காட்சி தந்துள்ளார். இதை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம் என்றார்.
இது குறித்து பிர்லா கோளரங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்திரன் ஆயிரம் ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. சந்திரனில் உள்ள நிலப்பரப்பு கறுப்பாகவும், மலைப்பரப்பு வெள்ளையாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் சந்திரன் பாட்டி போன்றும், முயல் போன்றும், அம்மா, மகள் போன்றும் தெரிவதாக சொல்வார்கள். தற்போது சாய்பாபா போல் உள்ளது என்று கூறுகிறார்கள். இது மக்களின் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம். அறிவியல் ரீதியாக அப்படி ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*