Home » Flash News » கருணாஸ் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

கருணாஸ் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை,செப்.23:நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு ஸ்டாலின், தினகரன், உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: கருணாஸுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது. ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர்நீதிமன்றத்தையும் மிக மோசமாக விமர்சித்த எச். ராஜாவை கைது செய்யாததைப் பார்க்கும் போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிய ‘கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு வந்துவிடக்கூடாது; தமிழ்மக்களின் ஏச்சையும் பேச்சையும் இதிலாவது தவிர்க்க வேண்டும்; என்ற காரணத்திற்காகவே கருணாஸை கைது செய்திருக்கிறார்கள் என்றேகருதுகிறேன்.

அ.ம.மு.க., துணை பொதுச்செயலா ளர் டிடிவி தினகரன் :கருணாஸ் மீதான நடவடிக்கை தமிழக அரசு மத்திய அரசுக்கு ஏவால் அரசு என்பது நிரூபணமா கியுள்ளது. மன்னிப்பு கேட்ட கருணாஸ் மீது நடவடிக்கை, சொன்னதை மாற்றி பேசிய எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து : கருணாஸ் பேசியதற்தாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் முக்குலத்தோர் சமூகத்திடையே கடும் மனவேதனையை ஏற்படுத்
தியுள்ளது. கருணாஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளது போல முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்கின்றனர். நான் முதலமைச்சரை இது தொடர்பாக நேரில் சந்தித்து முறையிட்டுள்ளேன். இந்த நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*