Home » Flash News » பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: காங். முன்னிலை

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: காங். முன்னிலை

சண்டிகர், செப்.23:பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே 33 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 369 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

354 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 2900 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.

குர்தாஸ்பூர் மாவட்டத்தில் 213 வார்டுகளில் 212ஐ காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இங்கு பிஜேபி-அகாலிதளம் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*