Home » Flash News » நடிகர் கருணாஸ் கைது

நடிகர் கருணாஸ் கைது

சென்னை, செப்.23: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து தலைமறைவான நடிகர் கருணாசை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து அந்த அமைப்பின் தலைவர் மற்றும் நடிகருமான கருணாஸ் எம்எல்ஏ பேசினார்.

அப்போது அவர் தமிழக முதல்வர், தி.நகர் காவல்துணை ஆணையர் உள்ளிட்டோர் பற்றி மிகவும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இது குறித்து உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கருணாஸ் அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கூட்டு சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கருணாஸ் மீது சில அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் ஆகியோரும் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் தலைமறைவான கருணாசை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*