Home » குற்றம் » புழல் சிறையில் மேலும் செல்போன்கள் பறிமுதல்

புழல் சிறையில் மேலும் செல்போன்கள் பறிமுதல்

செங்குன்றம், செப்.21:புழல் மத்திய சிறையில் தண்டனைப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பேட்டரிகள் கைப்பற்றப்பட்டன.

புழலில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வெளியான புகாரையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதிகளின் அறைகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து சிறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். புழல் சிறையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளிலும்அதிரடி சோதனைகள் நடைபெற்றன. இதில், அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் செல்போன்கள், போதைப் பொருட்கள் ஆகியவை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புழல் மத்திய சிறையில் நேற்றிரவு மீண்டும் சோதனை நடைபெற்றது. சிறைத்துறை அதிகாரி ஷேக் பாஷா தண்டனைப்பிரிவில் மேற்கொண்ட சோதனையில், திருநெல்வேலி காவல்நிலைய வழக்கில் சிறையில் உள்ள கைதி ஐயப்பனிடம் இரண்டு செல்போன்கள், சிம் கார்டு, பேட்டரிகளும், திருவாரூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய குணசேகரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டு, பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் இருவரும் சிறையருகே உள்ள சிறைத்துறை டிஐஜி முருகேசன் வீட்டிலும் வேலை செய்வார்கள் என்பதால் அங்கே உள்ள மாட்டுக் கொட்டகையிலும் சோதனை நடந்தது.காவலர்களை மீறி சிறையில் கைதிகளுக்கு எப்படி செல்போன்கள் கிடைத்தன, அவர்கள் யார் யாரிடம் பேசியுள்ளார்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*