Home » குற்றம் » முதியவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு: 3பேருக்கு வலை

முதியவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு: 3பேருக்கு வலை

சென்னை, செப்.20: புதுக்கோட்டையைச்சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் 2வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்தாராம்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சித்தனர். அப்போது அவர் சத்தம்போடவே முதியவரை கத்தியால் குத்தி விட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இதை பார்த்த பொதுமக்களை அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்தி விட்டு செல் போனை பறித்து சென்ற மூன்று வாலிபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*