Home » அரசியல் » ஈரோட்டில் மதிமுக மாநாடு: வைகோ அழைப்பு

ஈரோட்டில் மதிமுக மாநாடு: வைகோ அழைப்பு

சென்னை, செப். 12:ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டிற்கு வருமாறு தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

அதில்அவர் கூறியிருப்பதாவது:

ஈரோட்டில் கலைஞர் நகரில் செப்டம்பர் 15 அன்று மதிமுக சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, பொதுவாழ்வில் அடியேன் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து மாநில மாநாடாக பேரெழுச்சியுடன் நடை பெற்ற உள்ளதால் நூற்றாண்டைக் கடந்திருக்கின்ற திராவிட இயக்கத்தின் மீது சிலர் வன்மத்தை வாரி வீசி வரும் காலகட்டத்தில், திராவிட இயக்க இலட்சியக் கோட் பாடுகள் நீர்த்துப் போய்விடவில்லை என்பதை புரிய வைக்கப் போகும் மாநாடுதான் ஈரோட்டில் நடக்கிறது.

வரலாறு காணாத ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மக்கள் மீது அடக்குமுறை தர்பார் ஏவப்படுகிறது. அரசு நிர்வாகம் புறையோடிப்போய் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.

இந்தச் சூழலில் திராவிட இயக்கத்திற்கு அரண் அமைக்கப் போகிற மதிமுகவின் முப்பெரும் விழா மாநில மாநாட்டுக்கு தமிழ் பெருமக்களே அணி திரண்டுவந்து நாடு போற்றும் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்க வரவேண்டும்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*