ஆஸ்திரேலியா, செப். 12: நியூயார்க்கில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பங்கேற்றார். போட்டியின்போது செரினா, அவரது பயிற்சியாளருடன் சைகை மொழியில் பேசியதாக கூறப்பட்டதையடுத்து, நடுவருக்கும் செரினாவுக்கும் கடும் வாய்ப்போர் நடந்தது.
ஆவேசப்பட்ட செரினா, டென்னிஸ் பேட்டை கீழே போட்டு உடைத்தது சர்ச்சையின் உச்சக்கட்டம். இது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் ஓய்வதற்குள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓவியர் மார்க் நைட், செரினா வில்லியம்ஸை கலாய்க்கும் வகையில் கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வரைந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூன் குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர். ஆட்டத்தின்போது, செரினா ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் தான் அச்சித்திரத்தை வரைந்ததாகவும், இனவாதக் கருத்துகளைத் தூண்டுவது தமது நோக்கம் இல்லை என்றும் நைட் விளக்கம் அளித்துள்ளார்.