மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35646
Export date: Fri Dec 14 7:16:06 2018 / +0000 GMT

தொடரை வென்றது இங்கிலாந்து


லண்டன், செப். 12:இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளையடுத்து, இறுதியாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியதால் முதல் நான்கு போட்டிகளிலேயே 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

இந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல், மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி, 345 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இதனால், 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று டெஸ்ட் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், சதம் அடித்து சாதனைகள் புரிந்தும், இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.
Post date: 2018-09-12 11:00:25
Post date GMT: 2018-09-12 11:00:25

Post modified date: 2018-09-12 11:00:25
Post modified date GMT: 2018-09-12 11:00:25

Export date: Fri Dec 14 7:16:06 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com