This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Fri Sep 21 13:26:39 2018 / +0000 GMT

ஐபிஎல் நடத்துவதில் சிக்கல்: குழப்பத்தில் பிபிசிஐ


மும்பை, செப். 12: பொது தேர்தல், உலக கோப்பை போட்டி என அடுக்கடுக்கான நிகழ்வுகள் வரிசைக்கட்டி நிற்பதால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை எங்கு, எப்போது நடத்துவது என்பது அறியாமல் பிசிசிஐ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர், இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 12-வது சீசனை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என்ற குழப்பத்தில் பிசிசிஐ சிக்கியுள்ளது. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. கால அட்டவணையை ஆராய்ந்த பின்னரே, பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதா? வெளிநாடுகளில் நடத்துவதா? என்ற இறுதி முடிவு எடுக்க முடியும்.

இதனிடையே, இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியான தகவலுக்கு, பெரும் பொருட்செலவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை (50 ஓவர் ) தொடர் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக ஐபிஎல் ., தொடரை முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தினாலும், உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் தொடரில் களமிறங்குவார்களா? என்பதும் பிபிசிஐ-க்கு சவாலான விஷயமே.
Post date: 2018-09-12 10:55:55
Post date GMT: 2018-09-12 10:55:55
Post modified date: 2018-09-12 10:55:55
Post modified date GMT: 2018-09-12 10:55:55
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com