மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35610
Export date: Thu Feb 21 0:41:29 2019 / +0000 GMT

6 வழிச்சாலையான 8 வழிச்சாலை திட்டம்


சென்னை, செப்.12:சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அதனை 6 வழிச்சாலையாக மாற்றி மத்திய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ 10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய- மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக நிலங்கள்கை யகப்படுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்குஎதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்தனர்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பிஇருக்கிறது. சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு முதலில் ரூ.10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.தற்போது அதிகாரிகள்மேற்கொண்ட களப்பணியில் திட்ட மதிப்பீட்டுத் தொகையை ரூ 7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த திட்டத்துக்காக300 ஏக்கர் வனப்பகுதியை கையகப்படுத்தமுதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது103 ஏக்கராக குறைக்கப்பட்டு உள்ளது. அதுபோல வனப்பகுதியில் 13.2 கி.மீ தூரத்துக்கு சாலைஅமைக்க முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது 9 கி. மீ ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த பசுமை வழிச்சாலை 90 மீட்டர் அகலத்தில் மதிப்பிடப்பட்டு இருந்தது.தற்போது70 மீட்டர் அகலமாக குறைக்கப்பட்டு உள்ளது.வனப்பகுதியில் இந்த சாலை செல்லும் போது, கணக்கிடப்பட்டிருந்த 70மீட்டருக்கு பதிலாக 50 மீட்டராக குறைக்கப்பட்டள்ளது. வனப்பகுதியில் சர்வீஸ்சாலை அமைக்கவிருந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு முதலில்2 ஆயிரத்து 560 ஹெக்டெர் நிலம்கையகப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அது 1,900 ஹெக்டராக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும். வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post date: 2018-09-12 09:26:22
Post date GMT: 2018-09-12 09:26:22

Post modified date: 2018-09-12 09:26:22
Post modified date GMT: 2018-09-12 09:26:22

Export date: Thu Feb 21 0:41:29 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com