This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Wed Feb 20 17:35:26 2019 / +0000 GMT

காஷ்மீர், ஹரியானாவில் நில அதிர்வு




ஸ்ரீநகர், செப்.12:ஜம்முகாஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.

சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் அடிக்கடி லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அண்டை நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது. இந்த அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட
வில்லை.அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.
Post date: 2018-09-12 09:18:31
Post date GMT: 2018-09-12 09:18:31
Post modified date: 2018-09-12 09:18:43
Post modified date GMT: 2018-09-12 09:18:43
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com