This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Sat Sep 22 16:51:57 2018 / +0000 GMT

தங்க டிபன்பாக்சில் சாப்பிட்ட கொள்ளையன்


ஐதராபாத், செப்.12 :தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகர் அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர் பயன்படுத்திய பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வைரத்தால் ஆன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு, சில நாட்களுக்கு முன்னர், 2 கிலோ எடையுள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தால் ஆன டிபன்பாக்ஸ் மற்றும் கப் அன் சாசர் திருடு போனது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மும்பையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர் என்றும் இருவரும், அருங்காட்சியகத்தில் இருந்த பழமை வாய்ந்த தங்கத்திலான குரானை கொள்ளையடிக்கவே திட்டமிட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அதனை கொள்ளையடிக்காமல், தங்க டிபன்பாக்ஸ் மற்றும் தேநீர் கோப்பையை அவர்கள் திருடிச் சென்றனர்.
இதில் ஒரு கொள்ளையன், ஐதராபாத் நிஜாம் சாப்பிட்ட தங்க டிபன் பாக்சில் உணவுப்பொருளை வாங்கி கொள்ளையடித்த நாளில் இருந்து கைதாகும் வரை சாப்பிட்ட தகவலும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.
Post date: 2018-09-12 09:05:01
Post date GMT: 2018-09-12 09:05:01
Post modified date: 2018-09-12 09:05:01
Post modified date GMT: 2018-09-12 09:05:01
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com