மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35591
Export date: Sat Feb 16 3:57:45 2019 / +0000 GMT

சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவின் உயர் விருது


வாஷிங்டன், செப், 12:அமெரிக்காவில் வசிக்கு தமிழ்நாட்டு பெண்ணுக்கு அந்த நாட்டில் புதிய கண்டுபிடிப்புக ளுக்காக வழங்கப் படும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
ராஜலட்சுமி நந்தகுமார் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் கணினி துறையில் தனது பொறியியல் படிப்பை சென்னையில் படித்து முடித்தார். இவர் தனது மேற்படிப்பை அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி அதன் உரிமையாளருக்கு இருக்கும் உடல் நல பாதிப்புகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இவர் கண்டுபிடித்துள்ளார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் மூலம் நமது உடலில் ஏற்படும் அசைவுகளை வைத்து நமது உடலில் ஏதாவது நோயின் தாக்கம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இவருக்கு அந்த நாட்டின் பெருமைமிகு ‘'மார்கோனி சொசையிடி பால் பாரென் யங் ஸ்காலர் அவார்டு” வழங்கப்படுகிறது.

இவரது கண்டு பிடிப்பின் மூலம் ஸ்மார்ட் போன்களில் இருந்து நமது காதுகளுக்கு கேட்காத மெல்லிய சிக்னல்கள் போன்களின் ஸ்பீக்கர்கள் மூலம் நமது உடலுக்கு செலுத்தப்படுகிறது. அந்த சிக்னல்கள் மனித உடலில் இருந்து பிரதிபலிக்கப்பட்டு நோய்களை கண்டறிய உதவுகிறது என்பது குறிப்பிடதக்கது.
Post date: 2018-09-12 08:42:59
Post date GMT: 2018-09-12 08:42:59

Post modified date: 2018-09-12 08:42:59
Post modified date GMT: 2018-09-12 08:42:59

Export date: Sat Feb 16 3:57:45 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com