மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35585
Export date: Mon Feb 18 22:12:13 2019 / +0000 GMT

ஈஸ்வரனின் திருமணம் மீண்டும் நின்றுபோனது


ஈரோடு, செப்.12:பவானிசாகர் அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனின் திருமணம் 2-வது முறையாக நின்று போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

43 வயதான ஈஸ்வரனுக்கும் சந்தியா என்ற 23 வயது பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், சந்தியாவோ திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தியாவை வலைவீசி தேடி திருச்சியில் மீட்டனர்.

பின்பு நீதிபதியிடம் சந்தியாவை கொண்டுபோய் நிறுத்தியபோது, ‘எம்எல்ஏக்கு என் அப்பா வயசு. அவரை நான் எப்படி கல்யாணம் செய்வேன். என் வீட்டில் கட்டாயப்படுத்தியதால் வெளியேறினேன் என்று கூறினார். இதனால் சந்தியாவுடன் ஈஸ்வரனுக்கு திருமணம் நடக்காமல் போனது.

சந்தியா ஓடிப்போய்விட்டதால், உடனடியாக ஈஸ்வரனுக்கு அவரது இனத்திலேயே ஒரு பெண் பார்த்தாகிவிட்டது என்றும், குறித்த நாளிலேயே திருமணம் நடக்கும் என்றும் ஈஸ்வரன் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை என தெரிகிறது.

போதிய அவகாசம் இல்லாததால் குறித்த நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்ய பெண் வீட்டாருக்கு அவகாசம் இல்லாததால், இன்று திருமணம் நடைபெறவில்லை என எம்எல்ஏ வின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஈஸ்வரரின் திருமணத்திற்காகவும், வேறு இரண்டு நிகழ்ச்சிகளுக்காகவும் பந்தல் போடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணம் நடைபெறாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்னும் பெண் கிடைக்காததால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஐப்பசி மாதத்தில் எம்எல்ஏவின் திருமணம் நடக்கும் என்று அவரது குடும்பத்தார் உறுதியாக கூறுகின்றனர்.
Post date: 2018-09-12 08:38:51
Post date GMT: 2018-09-12 08:38:51

Post modified date: 2018-09-12 08:38:51
Post modified date GMT: 2018-09-12 08:38:51

Export date: Mon Feb 18 22:12:13 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com