சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வரும் அக்டோபர் 2-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்குமாறு சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விஜய்யின் கில்லி பட விழாவில் ரஜினி பங்கேற்றுள்ளார். மேலும் ரஜினி தற்போது நடித்து வரும் பேட்ட படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இந்த நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லக்னோவில் படப்பிடிப்பில் உள்ள ரஜினி, அக்டோபர் 2-ந் தேதி மட்டும் சென்னைக்கு வந்து விழாவில் கலந்துகொள்வார் என ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.