Home » சென்னை » 116 ரெயில் நிலையங்களுக்கு விரைவில் இடம் தேர்வு

116 ரெயில் நிலையங்களுக்கு விரைவில் இடம் தேர்வு

சென்னை, செப்.11: மெட்ரோ ரெயில் 2-வது திட்டத்தின் கீழ் அமைய இருக்கும் 116 ரெயில் நிலையங்களுக்கான இடங்கள் அடுத்த சில வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. தற்போது நடைபெற்று வரும் மண் பரிசோதனை முடிவடைந்ததும் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது பகுதியாக ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் மாதவரம் முதல்
சோழிங்கநல்லூர் – சிறுசேரி வரை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

3 கொரிடார்களாக அமைக்கப்பட உள்ள வழித்தடங்கள் மாதவரம் முதல் சிறுசேரி, சிஎம்பிபி மற்றும் கலங்கரை விளக்கம், சோழிங்கநல்லூரை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்கான செலவினத்தில் பெரும்பகுதியை ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் கடனாக வழங்குகிறது. எஞ்சிய தொகையை மத்திய-மாநில அரசுகள் வழங்குகின்றன. ஜப்பான் நிறுவனம் கடன் தொகையை அனுமதித்தவுடன் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். முதல் கட்ட கடன் ஒதுக்கீடு செய்யப் பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது இந்த வழித்தடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாதவரம், புரசைவாக்கம், தரமணி, ஓஎம்ஆர் போன்ற இடங்களில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு மண் தோண்டப்பட்டு வருகிறது. மண் பரிசோதனை முடிவடைந்ததும் அடுத்த சில வாரங்களில் வடிவமைப்பு பணி முடிவடையும். இந்த வடிவமைப்பில் 116 ரெயில் நிலையங்கள் எங்கெங்கு அமைய வேண்டும் என்பதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வடிவமைப்பில் குறியீடுகள் செய்யப் படும். முதல் கட்டமாக மாதவரம் முதல் சிஎம்பிடி வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

50 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த வழித்தடங்களில் கட்டுமானப் பணிக்காக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே மெட்ரோ ரெயில் முதல் திட்டத்தின் விரிவாக்கப் பணியாக வடசென்னையில் வண்ணாரப் பேட்டை முதல் லிம்கோ நகர் வரையில் பாதை அமைக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. இப்பணிக்கு 2010-ல் மாநில அரசு அனுமதி கிடைத்துள்ள போதிலும் 2016-ல் தான் மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது 2-வது கட்ட பணிக்கு மத்திய அரசு 2 விதமான அனுமதியை வழங்க வேண்டும் என்ற போதிலும் முதல் அனுமதி கிடைத்தவுடனேயே கட்டுமானப் பணிகள் தொடங்கி விடுவோம் என்று மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*