மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35563
Export date: Thu Feb 21 0:31:00 2019 / +0000 GMT

ஊழல் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: எடப்பாடி
சென்னை, செப்.11: குற்றம் சுமத்தப்பட்டாலே ஒருவர் குற்றவாளி ஆகமாட்டார் என்றும், அமைச்சர் மீதான குட்கா ஊழல் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்போம் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுயதாவது; மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. தமிழகத்தின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செல்கிறோம் என்றார்.குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் மற்றும் டிஜிபி இல்லங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு இருப்பது பற்றி கேட்டதற்கு, குற்றம் சாட்டப்படுவதால் ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். அமைச்சர் மீதான குற்றச்சாட்டு உள்ளிட்ட ஊழல் புகார் வழக்குகளை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். குற்றம் நிருபிக்கபட்டால் தான் குற்றவாளியாக கருதப்படும் என்றார். குற்றச்சாட்டு வந்தவுடன் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாரா என்று கேட்டதற்கு அப்படி எடுத்தமாதிரி தெரியவில்லை. நானும் அமைச்சரவையில் தானே இருந்தேன். அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு அது உண்மையல்ல. சட்டரீதியாக அனைத்தையும் சந்திப்போம் என்றார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு இப்போதே அதிமுக பணம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்ட தற்கு அது தவறான செய்தி பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்றார்.மேலும் ஜெலலிதா தலைமையில் 37 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றதை போல் இப்போதும் வெற்றிபெறும் அளவுக்கு அதிமுக பலம் மிக்க கட்சியாக இருக்கிறது என்றார். சிபிஐ ரெய்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று தம்பிதுரை கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு அது அவருடைய கருத்து என்றார். மேலும் முதலமைச்சர் கூறுகையில், பாலாறு அருகே அணைகட்டுவதையும்,காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு முயற்சி நடப்பதற்கும் சட்டபடி சந்தித்து தடுத்து நிறுத்துவோம் என்றார்.

Post date: 2018-09-11 10:35:38
Post date GMT: 2018-09-11 10:35:38

Post modified date: 2018-09-11 10:35:38
Post modified date GMT: 2018-09-11 10:35:38

Export date: Thu Feb 21 0:31:00 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com