Home » சென்னை » சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயர்

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயர்

சென்னை, செப்.10:  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் வைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் டி.ஜெயகுமார் அளித்த பேட்டி வருமாறு:- மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதே போல, மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ‘டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்ற பெயரை வைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக அமைச்சரவை ஒப்புதலுடன் 2016 டிசம்பரில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில், அந்தக் கோரிக்கையை மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார் அவர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*