மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35527
Export date: Tue Mar 19 1:55:08 2019 / +0000 GMT

சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் அதிரடி மாற்றம்


திருச்சி, செப். 10:  திருச்சி விமான நிலையத்தில் நடந்த முறைகேடுகளை அடுத்து அங்கு பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் உள்ளிட்ட பணியாளர்கள் பலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

தலைமறைவான மேலும் பலரை தேடி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர், கடத்தல் பேர் வழிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தங்கம், மின்னணு சாதனப் பொருட்கள், மது வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளி நாடுகளிலிருந்து கடத்தி வர உதவு வதாகவும், குறிப்பாக அயல் நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பும்போது குடும்பத்தினருக்காக கொண்டு வரும் பொருட்கள் குறித்து, அவர்கள் விரக்தியடையும் வகையில் விசாரணை நடத்தி, வரி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆக, 5 ஆம் தேதி திடீர் முகாமிட்டு சோதனை மேற்கொண்டனர். சுங்கத் துறை அதிகாரிகள், பணியாளர்களிடம் தொடர் விசாரணை மேற் கொண்ட போது, கடத்தல் பேர்வழிகளுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் உதவியது தெரியவந்தது. இதையடுத்து, சுங்கத்துறை திருச்சி விமான நிலைய அதிகாரிகளான, உதவி ஆணையர் எம். வெங்கடேசலு, கண் காணிப்பாளர்கள் கலுகாசல மூர்த்தி உட்பட மொத்தம் 19 பேர் மீது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் து 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் 5 பேரும் மாற்றப்பட்டுள்ளனர். தவிர விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவிலும் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை செப். 3 ஆம் தேதி திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் ஜெ. முகமது நவ்பால் வெளியிட்டார்.

மாறுதல் உத்தரவு ப்படி, திருச்சி விமான நிலைய, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளர்களாக, நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், வேந்தர்சிங், நரேந்திரகுமார் (கார்கோ), ரவிகேஷ்குமார் கேசன் (கார்கோ) ஆகியோர் பொறுப்பேற்கவுள்ளனர்.
இதில் புகாரில் சிக்காத சில அதிகாரிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Post date: 2018-09-10 11:14:07
Post date GMT: 2018-09-10 11:14:07

Post modified date: 2018-09-10 11:14:07
Post modified date GMT: 2018-09-10 11:14:07

Export date: Tue Mar 19 1:55:08 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com