Home » சினிமா » யாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல: ரஞ்சித்

யாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல: ரஞ்சித்

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், யோகிபாபு, நடிகை கயல் ஆனந்தி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ரஞ்சித் பேசுகையில், இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும் என்றார்.

இயக்குநர் ராம் பேசுகையில், ராம் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் குரு ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். அவரை பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*