மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35514
Export date: Tue Dec 11 4:12:10 2018 / +0000 GMT

காங். ஆட்சியை விட பிஜேபி ஆட்சி சிறந்தது:மோடி


புதுடெல்லி, செப்.10:காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டு ஆட்சியை விட தமது 48 மாத ஆட்சி சிறப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிஜேபிகட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஒருவருக்கொருவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், பேச முடியாதவர்கள் எல்லாம் பிஜேபிக்கு எதிராக கூட்டணி அமைக்க திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒரு சவாலையும், நெருக்கடியையும் பிஜேபி சந்திக்கவில்லை.

இது தான் பிஜேபியின் வெற்றி.எதிர்க்கட்சிகள் காங்கிரசின் தலை மையை ஏற்கவில்லை என்று கூறினார். திறமையாக ஆட்சியை நடத்த முடியாமல் தேர்தலில் தோற்றவர்கள் எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். காங்கிரசின் தலைமையை அக்கட்சியுடன் உறவு கொண்டு இருக்கும் எந்த கட்சியும் ஏற்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் அமித்ஷா, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு 50 ஆண்டுகள் தங்களை யாரும் ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கூட்டத்தில் தலைவர்கள் பேசிய பேசிய விவரங்களை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.நடைபெற உள்ள சட்டமன்ற, நாடா ளுமன்ற தேர்தல்களில் கட்சியின் யுக்தி குறித்து விவாதிக்கப்பட்டது.
Post date: 2018-09-10 10:55:58
Post date GMT: 2018-09-10 10:55:58

Post modified date: 2018-09-10 10:56:47
Post modified date GMT: 2018-09-10 10:56:47

Export date: Tue Dec 11 4:12:10 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com