திருவாரூர், செப். 10: திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து கடைகள் மூடப்பட்டிருந்தது. அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. பள்ளி,கல்லூரிகள் வழக்கம் போல்இயங்கின.
திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், தி.மு.க இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்திருந்தது.
மாவட்டம் முழுவதும் பந்த் அறிவித்திருந்த நிலையில் தேனீர் கடைகள், சிறு பெட்டிக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு பேருந்துகள் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவில் இயக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. மாணவர்கள் போதிய பஸ் வசதியின்றி அவதிப்பட்டனர்.விசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை பகுதியில். உள்ள கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 50க்கு மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் செய்யப்பட்டதால் போக்குவரத்து தடை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப் பேரவைஉறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி, கே. உலகநாதன், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், பி.எழிரசன், காங்கிரஸ், ஆர்.எஸ். பாண்டியன், தி.மு,க, கோவி. சேகர், மதிமுக, சித்தார்த்தன், தி.க உள்ளிட்ட கட்சியினர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
நாகைமாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய மல்லிகைப்பூக்கள் அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்தன. மொத்தத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.