Home » குற்றம் » புழல் சிறையில் காவலரை தாக்கிய கைதி: ஜெயிலர் புகார்

புழல் சிறையில் காவலரை தாக்கிய கைதி: ஜெயிலர் புகார்

செங்குன்றம், செப்.10: புழல் மத்திய சிறை காவலரை தாக்கி கீழே தள்ளிய கைதி மீது ஜெயிலர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அமலாக்கத்துறை மூலமாக போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரசுலுதீன் புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 5-வது சிறை பிளாக்கில் இருந்து 4-வது பிளாக்கிற்கு செல்ல முயன்ற ரசுலுதீனை சிறை காவலர் லிவிங்ஸ்டன் பிரபு தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் லிவிங்ஸ்டன் பிரபுவை தாக்கியதோடு சட்டையை பிடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இது குறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்துள்ளார். வழக்கை பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*