This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Mon Oct 22 23:07:47 2018 / +0000 GMT

கடத்தப்பட்ட பங்குவர்த்தகர் வீடு திரும்பினார்


சென்னை, செப். 10:  மதுரவாயல் அருகே கடத்தி செல்லப்பட்ட பங்குவர்த்தகர் கணேஷ் நேற்று வீடு திரும்பினார். ஆள்மாற்றி, தன்னை சிலர் கடத்தி சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 35). இவர் வளசரவாக்கத்தில் அலுவலகம் அமைத்து பங்குவர்த்தகம் செய்துவந்துள்ளார்.

இதனிடையே, கணேஷ் கடந்த வெள்ளி கிழமை அன்று நள்ளிரவில் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கால்டாக்சி மூலம் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். மதுரவாயல் ஏரிக்கரை அருகே சென்றபோது, மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் கணேஷை கடத்தி சென்றதாக, அவரது மனைவி, மதுரவாயல் போலீசில் புகார் செய்திருந்தார்.

இதனையடுத்து, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான் சுந்தர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், கணேஷ் நேற்று வீடு திரும்பினார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், வேறொருவை கடத்துவதற்கு மாறாக, ஆள்மாற்றி தன்னை சிலர் காரில் கடத்தி சென்றதாகவும், திருப்பூரை தாண்டி அவினாசி அருகே சென்றபோது, அவர்கள் என்னை தவறாக கடத்தியது தெரியவந்ததால், என்னை அங்கேயே இறக்கிவிட்டு சென்றனர் என்றும், பின்னர், அங்கிருந்து ரெயில் மூலம், தான் சென்னை வந்ததாகவும் கணேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கணேஷ் கூறியது உண்மைதானா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Post date: 2018-09-10 10:21:16
Post date GMT: 2018-09-10 10:21:16
Post modified date: 2018-09-10 10:21:16
Post modified date GMT: 2018-09-10 10:21:16
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com