This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Mon Dec 17 14:17:24 2018 / +0000 GMT

ஐகோர்ட் வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு


காஞ்சிபுரம், செப்.10: காஞ்சிபுரத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சிவக்குமார் மீது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சர மாரியாக அரிவாளால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சிவக்குமார் (வயது26). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை 6மணியளவில் இவரது வீட்டிற்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல். பைக்கை வாசலில் நிறுத்தி விட்டு திபுதிபுஎன்று சிவக்குமார் வீட்டிற்கு சென்றது.

அவர்களை பார்த்ததும் வழக்கறிஞர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் சிவக்குமாரை அரிவாளால் தலை, கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதனால் சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த கும்பல்அங்கிருந்து சென்றது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அலறிதுடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகார் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிவக்குமாரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

விசாரணையில் வழக்கறிஞர் சிவக்குமார் காஞ்சிபுரத்தைக் கலக்கிய பிரபல ரவுடி ஸ்ரீதரின் வலதுகரமாக செயல்பட்டு வந்த ரவுடி தணிகாவுக்காக வழக்குகளில் வாதாடி வந்தார் என்பதும், இதேபோன்று தினேஷ் என்பவரும் ஸ்ரீதரின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் . ஸ்ரீதரின் மறைவுக்குப் பிறகு தினேஷ் மற்றும் தணிகா இடையில் போட்டி நிலவி வந்ததும் தெரியவந்தது. மேலும் சமீபத்தில் ரவுடி தினேஷ் மீது தணிகா நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்தார்.

தினேஷ் மற்றும் தணிகா மீது காஞ்சிபுரத்தில் உள்ள சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, தாலுக்கா காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தணிகா பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தினேஷின் வழக்கறிஞர் சிவக்குமார் அவரது குடும்பத்தினர் கண்முன்னே சரிமாரியாக வெட்டுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post date: 2018-09-10 10:16:04
Post date GMT: 2018-09-10 10:16:04
Post modified date: 2018-09-10 10:16:04
Post modified date GMT: 2018-09-10 10:16:04
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com