மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35499
Export date: Wed Feb 20 7:32:23 2019 / +0000 GMT

மரகதகாடு பட விழாவில் கமல் மீது பாய்ந்த இயக்குனர்


கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு'. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி பேசுகையில், கமலை ஹீரோவாக தனது படத்தில் அறிமுகப்படுத்தியவர் ரகுநாதன். இன்று உலக அரங்கில் கமல் உச்சத்தில் இருப்பதற்கு இவரும் ஒரு காரணம். இந்த மரகதக்காடு குழுவினர் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமலை தொடர்புகொண்டனர். ஆனால் ரகுநாதன் கமலை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. கமலுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் திரையுலகிற்கு ஏதாவது செய்ய நினைத்தால் ரகுநாதன் படத்திற்கு உதவி செய்யுங்கள் என்று ஆவேசமாக பேசினார். விழாவின் முடிவில் மரகதக்காடு இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்.
Post date: 2018-09-10 10:19:47
Post date GMT: 2018-09-10 10:19:47

Post modified date: 2018-09-10 10:19:47
Post modified date GMT: 2018-09-10 10:19:47

Export date: Wed Feb 20 7:32:23 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com