Home » சினிமா » 3டியில் வெளியாகும் 2.0 டீசர்

3டியில் வெளியாகும் 2.0 டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படம்2.0. இப்படத்தில் அக்ஷய் குமார், எமிஜாக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3டி திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2.0 படத்தின் டீசரை ரசிகர்கள் 3டியில் பார்ப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எந்தெந்த திரையரங்குகளில் 2.0 டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

3டியில் வெளியாகும் அதே நேரத்தில், யூ டியூபிலும், 2டி திரையரங்குகளில் 2டி தொழில்நுட்பத்தில் இந்த டீசர் திரையிடப்படவுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*