Home » சினிமா » ஜஸ்வர்யா வியூகத்தால் வெளியேறிய சென்ட்ராயன்

ஜஸ்வர்யா வியூகத்தால் வெளியேறிய சென்ட்ராயன்

சென்னை, செப்.10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் ஜஸ்வர்யா வியூகத்தால் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார். இருப்பினும் மனசாட்சி படி இந்த வாரம் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்துள்ளார் கமல்.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்-2 85 நாட்களை தொட்டுள்ளது. இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குகளை அனைவரும் செய்து முடித்துள்ளனர். இருப்பினும் மும்தாஜின் பிடிவாதத்தால் ரித்விகா மட்டும் இந்தவாரம் நேரடியாக நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சென்ட்ராயனிடம் மறைத்து ஏமாற்றி அதற்காக வியூகம் அமைத்து டாஸ்கை முடித்தார் ஐஸ்வர்யா. இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ட்ராயன் வெளியேறினார்.

யாரும் எதிர்பார்க்காத இந்த எவிக்ஷன் ரசிகர்கள் மட்டுமின்றி கமலையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை நேற்றைய நிகழ்ச்சியில் ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கையை விட ஓட்டு போடாதவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும். இந்த வாரம் என் மனசாட்சிபடி ஐஸ்வர்யாவை நான் நேரடியாக நாமினேஷன் செய்கிறேன். பிக்பாசும் அதை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன் என்று பரபரப்பாக கமல் பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*