மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35472
Export date: Wed Feb 20 17:13:23 2019 / +0000 GMT

செல்போன் கடையில் புகுந்து திமுக பிரமுகர் தாக்குதல்


திருவண்ணாமலை, செப்.10:திருவண்ணாமலையை அடுத்த தாணிப்பாடியில் செல்போன் கடையில் புகுந்து அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதாக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் வசிப்பவர் ஆறுமுகம் மகன் மணிவண்ணன் (வயது 25). இவர் தானிப்பாடியில் செல்போன் கடை வைத்துள்ளார். கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கணேஷ்(வயது 26). இவர் தனது பழுதடைந்த செல்போன் சார்ஜரை சரிசெய்து தருமாறு மணிவண்ணனிடம் கொடுத்துள்ளார்.

பகல் 12 மணிக்கு கொடுத்துவிட்டு 1 மணிக்கே வேண்டுமென்று கூறியிருக்கிறார். சரியாக 1 மணிக்கு வந்து சார்ஜரை வாங்கி சென்றனர். ஆனால் சார்ஜர் மீண்டும் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி இரவு 7 மணிக்கு கொடுத்துவிட்டு 8 மணிக்கே கொடுக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இரவு சார்ஜரை திரும்ப வாங்க சென்றபோது கணேஷ் மற்றும் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரகுபதி ஆகியோருக்கும் கடை உரிமையாளர் மணிவண்ணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
கடை உரிமையாளரின் சட்டை காலரை பிடித்துக்கொண்டு தாக்கி இருக்கிறார். கடையில் உள்ள ஒரு ஊழியர் பிளாஸ்டிக் சேரை எடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முயன்றார். ஆனால் அந்த பிளாஸ்டிக் நாற்காலியையும் பறித்து அவர்களை ரகுபதியும், கணேசும் கடுமையாக தாக்கி உள்ளனர்.இதில் கடை உரிமையாளர் மணி வண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தாணிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் மற்றும் ரகுபதியை கைது செய்தனர்.
விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில் புகுந்து இலவச பிரியாணி கேட்டு தாக்குதல் நடத்திய பாக்ஸர் யுவராஜ் சம்பவம் போலவே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post date: 2018-09-10 09:38:48
Post date GMT: 2018-09-10 09:38:48

Post modified date: 2018-09-10 09:38:48
Post modified date GMT: 2018-09-10 09:38:48

Export date: Wed Feb 20 17:13:23 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com