Home » உலகம் » சாலையில் சென்றவர்களுக்கு கத்திக்குத்து

சாலையில் சென்றவர்களுக்கு கத்திக்குத்து

பாரிஸ், செப்.10:பிரான்ஸ் தலைநகரான பாரீசில் கத்தியுடன் பாய்ந்த ஒருவன் சாலையில் நடந்து சென்றவர்களை கண்மூடித்தனமாக குத்தியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த அந்த ஏழு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவன் தீவிரவாதி அல்ல என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்றும் போலீ
சார் தெரிவித்தனர். இச்சம்ப வத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*