Home » விளையாட்டு » பாடகர் ஆகிறார் ஹர்பஜன் சிங்

பாடகர் ஆகிறார் ஹர்பஜன் சிங்

மும்பை, ஜூலை 8: இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், பாடகர் அவதாரம் எடுக்க இருக்கிறார். இந்தப் பாடலுக்கு இந்திப் பட இசை அமைப்பாளர் மிதுன் இசை அமைக்கிறார்.
‘ஹர்பஜனுக்கு இசை பிடிக்கும். நானும் அவரும் நண்பர்கள். நம் நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் விதமாக, ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்வார். அது பற்றி கடந்த ஒரு வருடமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உருவான ஐடியாதான் இது.
அதாவது நாட்டின் நலனுக்கு நல்லது செய்த ரியல் ஹீரோக்களை கொண்டாடும் விதமாக இந்த பாடல் உருவாக்கப்படுகிறது.
ஹர்பஜன் பாடுகிறார். இந்தியாவின் பல பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்’ என்றார் மிதுன்.
இந்தி, ஆங்கிலத்தில் இந்த ஆல்பம் உருவாகிறது.  இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும். இதற்காக ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பயிற்சி பெற்றுவருகிறார் ஹர்பஜன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*