மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35459
Export date: Wed Feb 20 23:53:14 2019 / +0000 GMT

ஜோகோவிச் யுஎஸ் ஓபன் சாம்பியன்


நியூயார்க், செப்.10: அமெரிக்கா ஓபன் டென்னிஸின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரின் 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள குரோஷியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், 3-ம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் டெல் போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதுவரை, ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஓபன் டென்னிஸில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் 3-வது முறையாக கைப்பற்றி உள்ளார்.
Post date: 2018-09-10 09:21:39
Post date GMT: 2018-09-10 09:21:39

Post modified date: 2018-09-10 09:21:39
Post modified date GMT: 2018-09-10 09:21:39

Export date: Wed Feb 20 23:53:14 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com