மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35453
Export date: Sun Sep 23 8:02:54 2018 / +0000 GMT

ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய சரிவு


புதுடெல்லி, செப்.10 :அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் இன்று மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது.

இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பு மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு 70 ரூபாயை தாண்டிய சரிவு, ஒரே நாளில் 33 காசுகள் சரிந்து, தற்போது 72.33 ரூபாயாக ஆகியுள்ளது.

இந்திய வரலாற்றில் இது மோசமான மதிப்பாகும். இதற்கு முன் இவ்வளவு மோசமான நிலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டது இல்லை. தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரியுமானால், விரைவில் டாலரின் மதிப்பு ரூ.100ஐ எட்டும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Post date: 2018-09-10 09:13:03
Post date GMT: 2018-09-10 09:13:03

Post modified date: 2018-09-10 09:13:03
Post modified date GMT: 2018-09-10 09:13:03

Export date: Sun Sep 23 8:02:54 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com