மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35447
Export date: Mon Feb 18 22:42:49 2019 / +0000 GMT

சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை


சென்னை, செப்.10:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசு அளித்துள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையின் பரிந்துரை கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கவர்னர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.ஓரிரு நாளில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post date: 2018-09-10 09:06:59
Post date GMT: 2018-09-10 09:06:59

Post modified date: 2018-09-10 09:06:59
Post modified date GMT: 2018-09-10 09:06:59

Export date: Mon Feb 18 22:42:49 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com