Home » Flash News » முழு அடைப்பு: தமிழகத்தில் பாதிப்பில்லை

முழு அடைப்பு: தமிழகத்தில் பாதிப்பில்லை

சென்னை, செப்.10: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பில்லை.

காங்கிரஸ் கட்சி பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாமக, மதிமுகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் பெரியளவுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*