மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=3543
Export date: Thu Feb 21 0:25:27 2019 / +0000 GMT

பத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.


அமரர் டி.ஆர். ஆர்.
தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்' பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார்.

ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்றாலும், அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களுடனும் அவர் நெருக்கமாக இருந்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகிய மூன்று தலைமுறைகளுடனும் அவர் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தார்.

பல்வேறு நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் முக்கிய தலைவராக அவர் பல ஆண்டுகாலம் பணியாற்றி இந்திய பத்திரிகையாளர் மத்தியில் பெரும் மதிப்பை பெற்று விளங்கினார்.
பத்திரிகையாளர் ஊதிய உயர்வு தொடர்பாக பல்வேறு ஊதியகுழுக்கள் முன்பு அவர் தன்னுடைய ஆணித்தரமான வாதங்களால் கணிசமான சம்பள உயர்வு பெற்று தந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பத்திரிகையாளர் பாதிக்கப்படும் போதெல்லாம், அவர்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தவர் டி.ஆர்.ஆர்.கூட்டுறவு இயக்கம் மூலம் நவமணி பத்திரிகை உருவாக காரணமாக இருந்தவர். பின்னர் மக்கள் குரல் என்ற பத்திரிகையை தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க செய்தவர் டி.ஆர்.ஆர்.சாதாரணமாக துவக்கப்பட்ட இந்த பத்திரிகை,வெறும் உச்சத்தை தொட காரணமாக இருந்தவர் டி.ஆர்.ஆர். நாடும்- நடப்பும் என்ற பெயரில் மக்கள் குரல் பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் அன்றைய அரசியல் வாதிகளுக்கு பாலபாடமாக அமைந்திருந்தது.
மக்கள் குரல் வெற்றியை தொடர்ந்து ‘நியூஸ் டுடே' என்ற ஆங்கில பத்திரிகையை தொடங்கினார்.அவர் தொடங்கி வைத்த இந்த பத்திரிகையை அவரது அன்பு மகன் டி.ஆர். ஜவஹர் கடந்த கால் நூற்றாண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டி.ஆர்.ஆர். தமிழக தலைவர்கள் காமராஜர், அண்ணா,கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நெருக்கமாக பழகியவர்.
Post date: 2017-07-08 11:02:41
Post date GMT: 2017-07-08 11:02:41

Post modified date: 2017-07-14 11:11:49
Post modified date GMT: 2017-07-14 11:11:49

Export date: Thu Feb 21 0:25:27 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com