Home » தமிழ்நாடு » சிசிடிவி பொருத்தாத வணிக நிறுவனங்கள் உரிமம் ரத்து

சிசிடிவி பொருத்தாத வணிக நிறுவனங்கள் உரிமம் ரத்து

சென்னை, செப்.9:வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாவிட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நகரில் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடைபெறும் திருட்டை தடுப்பதற்கும், பொருட்கள் திருட்டுபோனால் உடனடியாக கண்டுபிடிப்பதற்கும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இதுவரை பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

இதையடுத்து தற்போது சென்னை மாநகர காவல் துறை சார்பில் வணிக வளாகங்களுக்கு அறிவிப்பில் கட்டாயமாக கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கேமிரா பொருத்தாத நிறுவனங்களின் உரிமங் கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக் கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*