Home » Flash News » ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 32 சவரன் கொள்ளை

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 32 சவரன் கொள்ளை

சென்னை, செப்.9:ஓடும் ரெயிலில் தூங்கிய பெண்ணி டம் 32 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி வயது 44. இவர் ஆந்திராவுக்கு சென்று விட்டு சர்கார் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை எழும்பூருக்கு வந்தார்.

இன்று காலை ரெயில் எழும்பூர் வந்தடைந்ததும் அவருடன் வந்தவர் தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பியுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை உள்பட பையில் வைத்திருந்த 32 சவரன் தங்க நகை மற்றும் ரூ.65,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு ஓடும் ரெயிலில் கொள்ளையடித்தவர் களை தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*