Home » தமிழ்நாடு » தமிழகத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம்

தமிழகத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம்

சென்னை, செப்.9: தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

கடந்த முதல் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் மனு அளிக்கலாம். இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். இதற்காக தமிழகத்தில் உள்ள 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது நீக்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள் வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். இதே பேன்ற சிறப்பு முகாம்கள் வருகிற 23ந் தேதியும், அடுத்த மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இந்த முகாம்களுக்கு வர முடியாதவர்கள் அலுவலக நாட்களில் அடுத்த மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை அதற்கான அலுவலகங்களில் அளிக்கலாம். இந்த சிறப்பு முகாம்கள் மற்றும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர்கள், இதற்கென நியமிக்கப்பட்ட 10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*