மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35369
Export date: Tue Dec 11 4:21:22 2018 / +0000 GMT

ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஆசை: அனுராக் காஷ்யப்


யன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் கடந்த 30-ம் தேதி வெளியான ‘இமைக்கா நொடிகள்' படம் ரசிகர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.

நிகழ்ச்சியில் அனுராக் காஷ்யப் பேசுகையில், ருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய் என்னை எமோஷனலாக அணுகினார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார். மகிழ் திருமேனி தான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமா எனக்குமிகவும் பிடிக்கும். அந்த ஆசையால் நடிக்க வந்தேன். ரஜினிக்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு அவர் பேசினார்.

அதர்வா பேசுகையில், என் வாழ்வில் இமைக்கா நொடிகள் ஒரு சாப்டர். ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அஜய் என்ன பண்ணனும் என்பதில் தெளிவாக இருந்தார். படம் பிரமாண்டமாக இருக்கும் என்று சொன்னவுடன் தயாரிப்பாளரும் உற்சாகத்துடன் வந்தார். அனுராக் காஷ்யாப் தான் ருத்ராவாக நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமானது. இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனர். அவருக்கு தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது மகிழ்ச்சி என்றார்.
Post date: 2018-09-09 09:23:09
Post date GMT: 2018-09-09 09:23:09

Post modified date: 2018-09-09 09:23:09
Post modified date GMT: 2018-09-09 09:23:09

Export date: Tue Dec 11 4:21:22 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com