மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35363
Export date: Fri Sep 21 14:20:39 2018 / +0000 GMT

செரினா அதிர்ச்சி தோல்வி: ஒசாகா சாம்பியன்


நியூயார்க், செப்.9:அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒஸாகா அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்சை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று வரலாறு படைத்துள்ளார்.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் - ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினர்.
இதில், ஒஸாமா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தினார். இதன் மூலம், அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை ஒசாகா வென்று சாதனை படைத்துள்ளார். இவர், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இந்த இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸுக்கும், நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், செரீனா வில்லியம்ஸ் புள்ளிகளை இழக்க நேரிட்டது.
Post date: 2018-09-09 09:14:36
Post date GMT: 2018-09-09 09:14:36

Post modified date: 2018-09-09 09:14:36
Post modified date GMT: 2018-09-09 09:14:36

Export date: Fri Sep 21 14:20:39 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com