Home » Flash News » தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

சென்னை,செப்.9:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்ட நிலையில், விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பி வைக்க அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வராக ஜெயலலிதா இருந்த போது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பி வைத்தார். ஆனால் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் ராஜூவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, சட்ட நிபுணர்கள், மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் அடிப்படையில், தமிழக அமைச்சரவை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதே போன்று தமிழகத்தில் குட்கா வழக்கில் புயல் அடிக்க தொடங்கியுள்ளது. குட்கா ஊழல் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*