Home » Flash News » பிக்பாஸ் வீட்டில் ஏசி மெக்கானிக் பலி

பிக்பாஸ் வீட்டில் ஏசி மெக்கானிக் பலி

 சென்னை, செப். 8:  பிக்பாஸ் வீட்டில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்த தொழிலாளி ஒருவர், 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இவர், ஏசி மெக்கானிக்கான இவர். பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் செட்டு போட்டு பிக் பாஸ் – 2 நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்த செட்டில், அரியலூரை சேர்ந்த குணசேகரன் (வயது 30) என்பவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். பணியாளர்கள் தங்குவதற்காக அதே பகுதியில் 2-வது மாடியில் ஒதுக்கப்பட்டுள்ள தனியறையில் தங்கி இவர் வேலை பார்த்துவந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் 2-வது மாடியில் நின்றுக்கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, சக பணியாளர்களை குணசேகரனை மீட்டு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இது குறித்து
நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*