Home » Flash News » ‘என் மீது ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார்’: எஸ்.பி.ஜெயக்குமார்

‘என் மீது ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார்’: எஸ்.பி.ஜெயக்குமார்

விழுப்புரம், செப்.8: குட்கா ஊழல் விவகாரத்தில் என் மீது முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீண் பழி சுமத்துகிறார் என்று விழுப்புரம் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
குட்கா ஊழலை விசாரித்து வரும் சிபிஐ, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உட்பட 35 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த நிலையில், குட்கா ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பில்லை என்றும், தான் வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப்படுவதாகவும் ஜார்ஜ் கூறியிருந்தார்.
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் குட்கா ஊழல் குறித்த தகவல்களை தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், இந்த ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்குத் தெரியும் என்றும் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது குறித்து தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் கூறியதாவது:-

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிரூபிக்க வேண்டும். ஆனால் பிற அதிகாரிகள் மீது வீண் பழிபோடக் கூடாது. குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர். உழைப்பது என் கடமை என்றாலும் தற்போது சொல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது.
பழிவாங்கும் நோக்கத்துடனே ஜார்ஜ் என் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*