Home » Flash News » குட்கா ஊழல் பட்டியலை சிபிஐயிடம் கோரியிருக்கிறது அமலாக்கத்துறை

குட்கா ஊழல் பட்டியலை சிபிஐயிடம் கோரியிருக்கிறது அமலாக்கத்துறை

சென்னை, செப்.8: குட்கா ஊழலில் தொடர்பு டையவர்களின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பான பெயர் பட்டியலை தருமாறு சிபிஐக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரத்தை பான்பராக் ஆலை உரிமையாளர் மாதவராவ் வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 5 மற்றும்  6- ந் தேதிகளில் 35 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இதில் ஊழலில் தொடர்புடையவர்கள் பெயர் பட்டியலை சிபிஐ தயாரித்து அவர்களிடம் விசாரணை நடத்துவற்கு ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் மாதவராவுக்கு  சொந்தமான குட்கா குடோனில் 2015-ல் சோதனை நடத்தியபோது ரூ.250 கோடிக்கு வரிஏய்ப்பு நடத்திருப்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்தது. அவரது டைரிகள் மூலம் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணப்பரிமாற்றத்தில் நிதி மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கவுள்ளது. ஊழலில் தொடர்புடைவர்களின் பெயர் பட்டியலை கேட்டு சிபிஐக்கு இத்துறை கடிதம் எழுதி இருக்கிறது.
சிபிஐ நடத்திய சோதனை அடிப்படையில் மாதவராவ், அவரது பங்குதாரர்கள் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோது கைதான 5 பேர் உள்ளிட்ட தொடர்புடைய மற்றவர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இதில் முறைகேடு நடந்திருந்தால் சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிகிறது. இதன் காரணமாக அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் நேற்று அளித்த பேட்டியில் சில போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் இல்லங்களிலும் சிபிஐ சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பட்டியலையும் சிபிஐ தயாரித்து வருகிறது.
இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது இல்லங்களில் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விளக்கமளித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முதலமைச்சரை சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*